News Just In

12/27/2023 06:14:00 PM

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு!



மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளில் கல்வியில் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வுஇன்று வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் தலைமையில் பட்டிருப்பு தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜி.ஜி.முரளிதரன் கலந்து கொண்டார்.

கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஆர்.வசந்தராசா உட்பட பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தரம் ஜந்து புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த.சாதாரணபரீட்சை, க.பொ.த.உயர்தரப்பரீட்சை ஆகியவற்றில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவ மாணவிகள்நினைவுச்சின்னம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

No comments: