News Just In

12/28/2023 09:53:00 AM

நடிகர் விஜயகாந்த் காலமானார்!




தென்னிந்தியாவின் பிரபல நடிகரும் தே.மு.தி. க கட்சியின் தலைவருமான விஜயகாந்த் காலமானார்

மியாட் மருத்துவமனையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த விஜயகாந்த் அதன்பிறகு அவர் தேமுதிக கட்சியை ஆரம்பித்து அரசியலில் நுழைந்தார்.




அதன்பிறகு நேரடி அரசியலில் இருந்து ஒதுங்கி அறிக்கை வாயிலாக மட்டுமே அரசியல் செய்து வந்தார்.கடந்த 2020ஆம் ஆண்டு கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த மாதம் 18ம் திகதி சென்னை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.

முதலில் அவர் வழக்கமான பரிசோதனைக்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது.
எனினும் அவருக்கு மூச்சுத்தினரல், இருமல் காரணமாக அவருக்கு சுவாசிப்பதில் பிரச்சினை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து அவர் மருத்துவமனையில் 2 வாரங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்ற விஜயகாந்த் பூரண குணமடைந்தார்.

இதையடுத்து கடந்த டிசம்பர் 11ம் திகதி அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார் .இதனையடுத்து கட்சியின் பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார் விஜயகாந்த்.

இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

No comments: