News Just In

12/01/2023 06:39:00 PM

பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறியுள்ளார் : மன்னாரில் எம்.ஏ.சுமந்திரன்!





அரசியலமைப்பைத் தெரிந்து கொண்டே மீறினால் ஜனாதிபதி பதவியில் இருந்து அவரை நீக்குவதற்கு அது போதுமான காரணமாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மன்னாரில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பு பேரவையினுடைய அனுமதி இல்லாமல் பொலீஸ் மா அதிபர் நியமிக்கப்பட முடியாது. ஜனாதிபதி ஓட்டு மொத்தமாக அரசியலமைப்பை மீறி செயல்படுகிறார்.

அத்துடன் பதில் பொலிஸ்மா அதிபரைக் கூட நியமிக்க முடியாது.

இவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் நாட்களில் சில சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தீர்மானித்திருக்கிறோம்.

அத்தோடு கட்சி உறுப்பினர்களோடும் இன்றைய அரசியல் சூழ்நிலைகள் சம்பந்தமாக ஒரு சிறு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்று இருக்கிறது” என அவர் மேலும் தெரிவித்தார்

No comments: