இலங்கை இருளில் மூழ்குமா!. நேற்றைய தினம் நடந்த பாராளுமன்ற உரையின் போது. கோட்டாபய ராஜபக்ஷ 22 மில்லியன் மக்களை மின்வெட்டினால் 4 மணித்தியாலங்களுக்கு மேலாக இருளில் வாழ வைத்தார். தற்போதைய அரசாங்கமும் கூட மின் கட்டணத்தை உயர்த்தி 25 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை 24 மணி நேரமும் இருளில் வாழ வைக்கிறது. மின் கட்டண அதிகரிப்பினை மேற்கொள்ள கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் அனுமதிகோரியிருந்தனர். Public Utilities Commission of Sri Lanka (PUCSL) ஆனது இலங்கை மின்சார சபையின் மின் கட்டண உயர்வினை மேற்கொள்வது தொடர்பாக மக்கள் சார்பாக ஒரு சுயாதீனமான குழுவொன்றினை அமைத்தே அனுமதி வழங்க வேண்டும். கடந்த காலத்தில் காஞ்சன விஜேசேகர தான்தோன்றித்தனமாக மின் கட்டணத்தினை உயர்த்துவதற்கு அனுமதியினை கேட்ட போது முன்னாள் தலைவராக இருந்த ஜானக ரத்நாயக்க மக்களுக்கு இது அநீதி அளிக்கக்கூடிய விடயமெனக் கூறி அதற்கு இடமளிக்கவில்லை. அத்துடன் PUCSL தலைவரையும் பதவி விலகக் கூறி மாற்றம் செய்தார். இதற்கு மட்டக்களப்பு மாவட்ட அமைச்சர்களான பிள்ளையான் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் ஆதரவாக செயற்பட்டனர். தற்போதைய PUCSL ஆனது மின்கட்டண அதிகரிப்பிற்கு எவ்வித தடையினையும் விதிக்காது ஒரு Rubber Stamp போல் மாறியுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் வரை இலங்கை மின்சார சபையானது நஷ்டமடைந்துள்ளது; அதனால் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டுமென கூறினர். ஆனால் கடந்த மூன்று மாதங்களாக பொழிந்த மழையின் காரணமாக நீரினூடான மின்சாரத்தினையே அதிகம் உற்பத்தி செய்தனர். இதனால் இலங்கை மின்சார சபைக்கு கிட்டத்தட்ட 51 மில்லியன் ரூபாய் இலாபம் ஐப்பசி, கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் கிடைக்கக் கூடியதாக இருக்கும். ஆகவே இவர்கள் மின்கட்டண அதிரிப்பினை மேற்கொள்ள வேண்டிய தேவை சிறிதளவும் இல்லை. ஆனால் மின்கட்டண அதிகரிக்க இலங்கை மின்சார சபை “தமக்கு மழை வருமென தெரியாது” என பொறுப்பற்ற பதிலை தருகின்றனர். வானிலை ஆராய்ச்சியாளர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி வானிலை தொடர்பில் அறிந்திருக்க வேண்டியது இவர்களின் பொறுப்பு. இவர்களின் பொறுப்பற்ற தன்மையே 25 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருளில் வசிக்க காரணம்.
வாய்மூல கேள்வி பதிலினூடாக நான் மட்டக்களப்பிலுள்ள பிரச்சனைகள் தொடர்பிலும், மேலதிக சேவைகளை மட்டக்களப்பில் வழங்குவதற்கும் கேட்ட போது அதற்குரிய நிதி இல்லை என அமைச்சர் கூறினார். ஆனால் 51 மில்லியன் ரூபாய் இலாபம் மின்சார சபையினால் கிடைத்திருக்கிறது.
வாய்மூல கேள்வி பதிலினூடாக நான் மட்டக்களப்பிலுள்ள பிரச்சனைகள் தொடர்பிலும், மேலதிக சேவைகளை மட்டக்களப்பில் வழங்குவதற்கும் கேட்ட போது அதற்குரிய நிதி இல்லை என அமைச்சர் கூறினார். ஆனால் 51 மில்லியன் ரூபாய் இலாபம் மின்சார சபையினால் கிடைத்திருக்கிறது.
இலங்கை மின்சார சபையானது தன்னிச்சையாக இலாபமீட்டும் ஒரு நிறுவனமா? இலங்கை மின்சார சபை மக்களுக்கு முறையற்ற சேவைகளை வழங்குவதால் அதற்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக மேற்கொள்விருக்கும் நடவடிக்கைகள் என்ன? என கேள்வி எழுப்பிய போது சித்திரை மாதத்தில் விலையை குறைப்போம் என கூறுகின்றனர். சித்திரை மாதத்திற்கு பின்னரான பகுதிகளில் தேர்தல் நடைபெறும் என்பது அனைவரும் அறிந்ததே. இதற்காகவே அரசியல் இலாபம் தேடும் அரசாங்கமானது சித்திரை மாதத்தில் மின்கட்டணத்தை குறைப்பதாக கூறுகிறது. இத்தகைய சூழ்ச்சி செயலினை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
No comments: