News Just In

12/27/2023 05:55:00 PM

பெரிய வெங்காயத்தின் விலையில் மாற்றம்?




பாகிஸ்தானிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படவுள்ள நிலையில், பெரிய வெங்காயத்தின் விலை மேலும் குறைவடையும் என பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தானிலிருந்து இந்த வாரம் பெருமளவு பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டவுள்ளதுடன், அடுத்த மாதம் சீனா மற்றும் நெதர்லாந்திலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படவுள்ளது.

இதன்காரணமாக பெரிய வெங்காயத்தின் விலை வெகுவிரைவில் குறைவடையும் என பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பெரிய வெங்காய தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில், பாகிஸ்தான், சீனா, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக வெங்காய இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராமை, 380 ரூபாயிற்கு மொத்த வியாபாரிகள் விற்பனை செய்வதாகவும் இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

350 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயமே, இவ்வாறு 380 ரூபாவிற்கு மொத்த வியாபாரிகளுக்கு வழங்கப்படுகிறது.

பெரிய வெங்காயத்தின் சில்லறை விலையாக 405 ரூபா முதல் 420 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: