News Just In

12/03/2023 05:28:00 AM

புதிய பொலிஸ்மா அதிபர் நியமனத்துக்கு நாங்கள் இணங்கவில்லை - சஜித் பிரேமதாச விளக்கம்



அரசியலமைப்பு பேரவை புதிய பொலிஸ்மா அதிபர் நியமனத்துக்கு அனுமதி வழங்கியபோதும் அது ஏகமனதாக இடம்பெறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (02) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்.

அரசியலமைப்பு பேரவையின் விடயங்களை வெளிப்படையாக கதைப்பதில்லை. என்றாலும் சில சந்தர்ப்பங்களில் தெளிவில்லாத நிலை ஏற்படும்போது அது தொடர்பில் விளக்கமளிப்பது எமது கடமையாகும்.

விசேடமாக பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்கும் நடவடிக்கை இடம்பெற்றது.

அந்த நியமனத்துக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியதாக பல வெளியீட்டு நிறுவனங்கள் தெரிவித்திருந்தன. அது உண்மை.என்றாலும் பொலிஸ்மா அதிபருக்கு அனுமதி வழங்கப்பட்டபோது, அதற்கு அரசியலமைப்பு பேரவையின் அனைவரும் அனுமதி வழங்கியதாகவே நாட்டு மக்கள் மத்தியல் கருத்து நிலவி வருகிறது. அது அவ்வாறு இல்லை. அரசியலமைப்பு பேரவையின் 5 இல் 3 தீர்மானத்தின் பிரகாரமே அது இடம்பெற்றது.

அதாவது புதிய பொலிஸ்மா அதிபர் நியமனத்துக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி அளிக்கும்போது நானும் கபீர் ஹாசிமும் மற்றும் பேரவையின் மேலுமொரு நபரும்அந்த தீர்மானத்துக்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த விடயத்தை தெரிவிக்கிறேன் என்றார்.

No comments: