News Just In

12/03/2023 06:34:00 AM

இன்றைய வானிலை அறிவிப்பு!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் ஒரு தாழமுக்கமாக ஆழமான வலுவடைந்து டிசம்பர் 02ஆம் திகதி 0530 மணிக்கு வட அகலாங்கு 10.50 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84.10 E இற்கும் அருகில் திருகோணமலையிலிருந்து வடகிழக்காக ஏறத்தாழ 380 கிலோமீற்றர் தூரத்தில் நிலை கொண்டிருந்தது. அது டிசம்பர் 03ஆம் திகதியளவில் ஒரு சூறாவளியாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதி மேற்கு - வடமேற்கு திசையில் இலங்கையின் வடக்கு கரையை அண்மித்ததாக டிசம்பர் 04ஆம் திகதியளவில் வடக்கு தமிழ்நாடு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அதன் பின்னர், வடக்குத் திசையில் ஒரு சூறாவளியாக நகர்ந்து டிசம்பர் 05ஆம் திகதியளவில் தெற்கு ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடக்கக் சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவாமாகாணங்களில் அவ்வப்போதுமழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்தியமற்றும்கிழக்குமாகாணங்களில்சிலஇடங்களில்100 மி.மீக்கும்அதிகமானபலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

No comments: