News Just In

12/22/2023 02:42:00 PM

மோட்டார் சைக்கிள்களை திருடி வீடுகளில் பதுக்கி வைத்தவர் கைது!



கொழும்பு மற்றும் காலி ஆகிய பிரதேசங்களில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களை திருடி வீடுகளில் பதுக்கி வைத்தவர் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் தளபத்பிட்டிய பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் 19 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 14 மோட்டார் சைக்கிள் இலக்கத்தகடுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பொருட்களை பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் தலைமையிலுள்ள விசேட பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

சந்தேக நபரிடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல்வேறு பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப் புவனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: