News Just In

12/21/2023 05:14:00 PM

வவுனியாவில் ஆசிரியர்களுக்கிடையே அடிதடி!




வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில், ஆசிரியர்கள் மூவருக்கிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ள நிலையில் படுகாயமடைந்தவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை இச் சம்பவம் தொடர்பாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இது குறித்து விசாரணை செய்வதற்காக குழு ஒன்றை அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது


No comments: