
இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (BCCI) செயலாளர் ஜெய் ஷா தான் பொறுப்பு என்று அர்ஜுன ரணதுங்க குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு நேர்காணலில், இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுடனான நெருங்கிய தொடர்பினாலேயே BCCI ஐக்கு அடிபணியும் சூழ்நிலை உருவாகியது என்று ரணதுங்க குற்றம் சாட்டினார்.
“SLC அதிகாரிகளுக்கும் ஜெய் ஷாவிற்கும் இடையே உள்ள தொடர்பு காரணமாக அவர்கள் (BCCI) SLC ஐ மிதித்து கட்டுப்படுத்த முடியும் என்ற எண்ணத்தில் உள்ளனர்” என்று ரணதுங்க கூறினார்.
“ஜெய் ஷா இலங்கை கிரிக்கெட்டை நடத்துகிறார். ஜெய் ஷாவின் அழுத்தத்தால் எஸ்.எல்.சி பாழாகிறது. இந்தியாவில் உள்ள ஒரு நபர் இலங்கை கிரிக்கெட்டை சீரழிக்கிறார். அவரது தந்தை உள்துறை அமைச்சராக இருக்கும் ஒரே காரணத்தால் தான் இவர் அதிகாரம் செலுத்தக்கூடியவராக இருக்கிறார் ” என்று ரணதுங்க அழுத்தமாக கூறினார்.
SLC நிர்வாகத்தில் அரசியல் தலையீடு இருப்பதாகக் கூறி, சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) வெள்ளிக்கிழமையன்று SLC ஐ இடைநீக்கம் செய்த து குறிப்பிடத்தக்கது.
No comments: