News Just In

11/29/2023 10:46:00 AM

சம்மாந்துறை பிரதேச கலை இலக்கிய விழா !அரசாங்க அதிபரின் பங்குபற்றலுடன்.






Muhammed Nasim

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் அனுசரணையில் "பிரதேச கலை இலக்கிய விழா - 2023" சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா தலைமையில் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம, கெளரவ அதிதிகளாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திரு. நவநீதன், மேலதிக மாவட்ட செயலாளர் வீ.ஜெகதீசன் ஆகியோரும் இலக்கிய அதிதியாக எழுத்தாளரும் வைத்தியருமான எம்.எம். நெளசாட் மற்றும் பிரதேச செயலக உயர் அதிகாரிகள் உத்தியோகத்தகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கலை கலாசார நிகழ்வுகள், போட்டி நிகழ்ச்சிகளுக்கான பரிசில்கள் வழங்கல் மற்றும் கலைஞர் கெளரவிப்பு என பல நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .

No comments: