(நூறுல் ஹுதா உமர்)
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் தகவல் வெளியீட்டு பணியகம் மற்றும் மனத்துயர் பரிகார மையம், ஆகியனவற்றை அங்குரார்ப்பண நிகழ்வும், ஊடகவியலாளர் சந்திப்பும் இன்று இடம்பெற்றது
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ எல் எம் றிபாஸ் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக, நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம் பி ஏ வாஜித் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது
இந்த நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே எம் றயீஸ், நிந்தவூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் எம் ஏ எம் றசீன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நிர்வாக உத்தியோகத்தர் எம் எஸ் வி வஜிதா உட்பட சுகாதார துறையின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்
சுகாதார சேவையை மேம்படுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்தில் முன்னுதாரணமாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய பிரிவுகளின் மூலம் வைத்தியசாலையின் செயற்பாடுகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறுகின்ற, வைத்தியசாலையின் ஊடாக மக்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய செயல்பாடுகளை சந்தைப்படுத்துகின்ற நோக்குடன் இந்த தகவல் வெளியிட்டு பணியகம் ஊடகப்பிரிவு மற்றும் மனதுயர் பரிகார மையம் ஆகியன திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்
இதன் மூலம் சுகாதார கல்விப் போதனைகளை மக்கள் மத்தியில் முன்னெடுக்கும் நோக்குடன் அதிகார வரம்புக்கு உட்பட்ட வகையில் இந்த புதிய பிரிவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளமை கல்முனை பிராந்தியத்திற்கு ஒரு முன்னோடியான செயற்பாடாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்
No comments: