கனடாவில் தமிழீழத்திற்கு கிடைத்த அங்கீகாரம்: முதன்முறையாக ஏற்றப்பட்ட தமிழீழத் தேசியக்கொடி
புலம்பெயர் ஈழத்தமிழ் சமூகம் அதிகளவில் வாழும் கனடாவில் பிராம்டன் நகர மண்டபத்தில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்ட வரலாற்று நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
பிராம்டன் நகர முதல்வர் பேட்ரிக் பிரவுன் நேற்று (21.11.2023) காலை 8.30 மணிக்கு தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செய்த இந்த வரலாற்று நிகழ்வை செய்துள்ளார்.
பிரம்டன் நகரசபை வளாகத்தில் தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்ட முதல் சந்தர்ப்பமாகவும் இது பதிவாகியுள்ளது.
மாவீரர்களின் குருதியாலும், மக்களின் தியாகத்தாலும் நெய்யப்பட்ட தமிழீழத் தேசியக்கொடியை உலகின் அங்கீகாரத்திற்கு எடுத்துச் செல்லும் முதற்படியாக இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. தமிழீழத் தேசியக் கொடி தினத்தை முன்னிறுத்தி இந்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: