News Just In

11/14/2023 05:39:00 PM

மட்டக்களப்பில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு விசேட சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு நடைபவனி இடம்பெற்றது





உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு விசேட சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு நடைபவனி இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, கருவப்பங்கேணி கிராம சேவை பிரிவில் இன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சுகுணனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில்நிகழ்வு இடம்பெற்றது.
நீரிழிவு நோய்களுக்கான விசேட சிகிச்சைகளும் விழிப்புணர்வு நடைபவனியும் பாலமீன்மடு ஆதார வைத்தியசாலைவைத்திய அதிகாரி வைத்தியர் சிங்கராஜா இனியன் தலைமையில் இடம்பெற்றது

தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள சிரேஸ்ட பிரஜைகளுக்கான தொற்றா நோய்கள் தொடர்பான விழிப்புணர்வுகருத்து பகிரவும் சிகிச்சைகளும், சிரேஸ்ட பிரஜைகளுக்கான நடைபவனியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது..

No comments: