News Just In

11/03/2023 06:06:00 PM

தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் க. குணசேகரம் அவர்களுக்கான விடுகை விழா கல்முனையில்!!





நூருல் ஹுதா உமர்

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் க. குணசேகரம் அவர்களுக்கான விடுகை விழா இன்று வலய கல்வி பணிமனை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வலயக்கல்வி பணிமனையின் நிருவாகத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.றியாஸா, கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ், கல்முனை கோட்டக் கல்வி பணிப்பாளரும், உதவிக் கல்விப் பணிப்பாளருமான யூ.எல். றியால், தமிழ்ப் பாடத்திற்கான ஆசிரிய வளவாளர் ஜெஸ்மி எம்.மூஸா ஆகியோர் ஓய்வு பெற்றுச் செல்லும் அதிகாரி தொடர்பில் நிகழ்வில் வாழ்த்துரையாற்றினர்.

இந்நிகழ்வில் வலயக்கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரிய வளவாளர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

இதன்போது வலய நூலகத்திற்கான ஒரு தொகுதி நூல்களும் ஓய்வு பெற்றுச் செல்லும் தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் க.குணசேகரம் அவர்களால் தமிழ் மொழிப் பிரிவிடம் வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.



No comments: