
எதிர்வரும் மாவீரர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு வாகரை துயிலுமில்லத்தில் மாவீரர் தின ஏற்பாடுகள் பிரதேச இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டு மிக எழுச்சி பூர்வமாக துயிலுமில்லம் தயார்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு இந்த துயிலுமில்லம் இனந்தெரியாத நபர்களால் தகர்க்கப்பட்டுள்ளது.
துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்டிருந்த வேலிகள் உடைக்கப்பட்டு, கொடிகள் அனைத்தும் கழற்றப்பட்டு, மாவீரர் கல்லறைக் கற்கள் தகர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வு தொடர்பான பதாதைகள் அகற்றப்பட்டு காவல்துறை விசாரணை என்ற பெயரில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார்.
No comments: