மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கத்தால்(EDS) தரம் 5மாணவர்களுக்கான இலவச வகுப்பு ஆரம்பமும் பெற்றார் சந்திப்பும்இன்று சங்கத்தின் ஸ்தாபகர் சி.தேவசிங்கன் தலைமையில் நடைபெற்றது.
சங்கத்தின் செயலாளர் வ.கமலதாஸ் அவர்களின் அறிமுக உரையை தொடர்ந்து ஸ்தாபகர்தலைவர் வகுப்பின் நோக்கம் பற்றியும் மாணவர்களின் விடைத்தாள்மதிப்பீட்டின் விளைவுகள் தொடர்பாக பெற்றாருக்கு எடுத்துக்கூறினார் .
பண்டாரியாவெளியை பிறப்பிடமாகவும் UK ஐ வதிவிடமாகவும் கொண்ட EDS இன் பழைய மாணவன் சிவசுப்பிரமணியம் கோகுலம் இச் செயல் திட்டத்திற்கான நிதியை வழங்குகின்றார் .இவ்வகுப்புகள் வாரஇறுதிநாட்களில் தொடர்ந்து பத்துமாதங்கள் நடைபெற உள்ளது.
மாதம் தோறும் மாதிரி பரீட்சைகள்விசேட ஆங்கில பயிற்சி வகுப்புகளும் நடைபெறும் .
மாதம் தோறும் மாதிரி பரீட்சைகள்விசேட ஆங்கில பயிற்சி வகுப்புகளும் நடைபெறும் .
EDS ஆல் முதன்முதலாக 1993 இல் ஆரம்பிக்கப்பட்ட இவ்வகுப்புகள்
30 ஆண்டுகளை கடந்து 31வது ஆண்டுக்குள் காலடி எடுத்து வைப்பது குறிப்பிடத்தக்கதாகும் .இவ் வகுப்பில் 100 க்கு மேற்பட்ட மாணவர்கள் இணைந்து பயன் அடைகின்றனர் . EDS பழையமாணவர் சங்கத்தின்
30 ஆண்டுகளை கடந்து 31வது ஆண்டுக்குள் காலடி எடுத்து வைப்பது குறிப்பிடத்தக்கதாகும் .இவ் வகுப்பில் 100 க்கு மேற்பட்ட மாணவர்கள் இணைந்து பயன் அடைகின்றனர் . EDS பழையமாணவர் சங்கத்தின்
தலைவர் மோகனசுந்தரம் கஜரூபன்நன்றியுரை வழங்கினார்.
No comments: