News Just In

11/04/2023 09:16:00 AM

நேபாளத்தில் பூகம்பம் - உயிரிழப்பு 128 ஆகஅதிகரிப்பு- வீடுகள் இடிந்து விழுந்தன - இந்தியாவில் பூகம்பம் உணரப்பட்டது.




நேபாளத்தை தாக்கிய பூகம்பம் காரணமாக 128க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வீடுகள் இடிந்து விழுந்தன பல மைல்களிற்கு அப்பாலும் அதிர்வை உணர முடிந்தது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 200,000க்கும் அதிகமான மக்கள் வாழும் மலைப்பகுதி நகரான ஜஜரகோட்டிற்கு அருகிலேயே பூகம்பம் மையம்கொண்டிருந்ததாகவும் அந்த பகுதியுடன் உடனடியாக தொடர்புகளை ஏற்படுத்த முடியவில்லை என நேபாள தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜஜரகோட் பகுதியில் 80 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்த பகுதியை சேர்ந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.ருகும் மேற்கு மாவட்டத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜஜரகோட்டில் 140க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பூகம்பம் காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அதனை அகற்றிவிட்டே பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிற்கு செல்லவேண்டியுள்ளது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜஜரகோட் அதிகாரியொருவர் நானே திறந்தவெளியிலேயே தங்கியுள்ளேன் நாங்கள் தகவல்களை பெறுகின்றோம் ஆனால் குளிர் இரவு காரணமாக தொலைதூரங்களில் இருந்து தகவல்களை பெறமுடியாத நிலை காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

புதுடில்லி உட்பட இந்தியாவின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டு;ள்ளது.

No comments: