News Just In

10/18/2023 09:51:00 AM

ஒன்பது பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்!





பொலிஸ் தலைமையக சுற்றறிக்கை மற்றும் அறிவுறுத்தல்களுக்கமைய செயற்படாத 09 பொலிஸ் உத்தியோகத்தர்களை பணி இடைநீக்கம் செய்யவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கள் மற்றும் பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பானவர்களும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொலிஸ் மாஅதிபரின் உத்தரவுக்கமைய பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மேற்கொண்ட விசாரணையில், இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, பொதுமக்களின் முறைப்பாடுகள் தொடர்பில் சுற்றறிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு இணங்காத 125 சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. அவற்றில் 84 விசாரணைகளை நிறைவு செய்த விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், 61 பேர் தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 19 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 41 சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள்முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு, ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: