
2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
டெல்லி அருண் ஜெட்லி சர்வதேச விளையாட்டுத் திடலில் இடம்பெற்றுவரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்ற நிலையில், இலங்கை அணித் தலைவர் தசுன் சானக்க முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளார்.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 428 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பில் Rassie van der Dussen 108 ஓட்டங்களையும் Quinton de Kock 100 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
அதேநேரம் உலக கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக சதமடித்தவராக தென்னாபிரிக்க அணியின் Aiden Markram பதிவாகியுள்ளார்.
அவர் 49 பந்துகளில் சதம் கடந்த நிலையில், 106 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Dilshan Madushanka 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதற்கமைய இலங்கை அணிக்கு 429 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
No comments: