News Just In

10/06/2023 02:39:00 PM

பண்ணையாளர்கள் சார்பாக பாராளுமன்றத்தில் போராட்டம்!

பண்ணையாளர்கள் சார்பாக பாராளுமன்றத்தில் போராட்டம்   --இரா. சாணக்கியன் 



இன்றைய தினம் மயிலத்தமடு மாதவனை பிரதேச காணி அபகரிப்பு தொடர்பாக பண்ணையாளர்கள் சார்பாக பாராளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தலைமையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இவ் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரையில் எம் மக்களுக்கான போராட்டம் பல வழிகளில் தொடரும் என கூறியிருந்தார். இதன் போது ஆளும்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ் போராட்டத்துக்கு எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர். அதிலும் குறிப்பாக மட்டக்களப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான பிள்ளையான் என்பவரும் ஆளும் கட்சியினரோடு இணைந்து இவ் போராட்டத்துக்கான எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.




No comments: