News Just In

10/30/2023 06:27:00 PM

பேஸ்புக்கில் மலர்ந்த காதல் : சகோதரிகளின் நிர்வாண புகைப்படங்களை வைத்து மிரட்டிய வட மாகாண இராணுவ வீரர்!





பேஸ்புக் மூலம்; காதல் வயப்பட்டு 16 வயது சிறுமியின் நிர்வாண புகைப்படங்களை வைத்து மிரட்டி பணம் திரட்டிய இராணுவ வீரர் ஒருவர் பொலிஸாரார் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட மாகாண இராணுவ முகாமில் பணி புரியும் இராணுவ வீரர் பேஸ்புக் மூலம் பாடசாலைக்கு செல்லும் 16 வயது மாணவியிடம் காதலிப்பதாக கூறியுள்ளார்.

அதன் மூலம் , குறித்த சிறுமியின் நிர்வாண புகைப்படங்களை வாட்ஸ்அப்பை பயன்படுத்தி பெற்றது மட்டுமன்றி , 13 வயது நிரம்பிய குறித்த சிறுமியின் தங்கையின் புகைப்படங்களையும் பெற்றுள்ளார்.

பின்னர் , அந்த படங்களை இணையத்தில் பதிவேற்றி விடுவதாக தனது வங்கி கணக்கில் 50 ஆயிரம் ரூபாய் வைப்பிலிடுமாறு மிரட்டி பணத்தை பெற முயன்ற நபரை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் இதுவரை நேரில் சந்தித்ததில்லை என தெரிவிக்கப்படுகின்றது

No comments: