News Just In

10/12/2023 03:47:00 PM

பிரேதஅறைகளாக மாறும் காசாவின் மருத்துவமனைகள்!

பிரேதஅறைகளாக மாறும் மருத்துவமனைகள்!



காசாவின் மருத்துவமனைகளில் மின்சாரம் இல்லாத நிலை காரணமாக அவை பிரேத அறைகளாக மாறுகின்றன என சர்வதே செஞ்சிலுவை குழு எச்சரித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக காசாவின் ஒரேயொரு மின்நிலையமும் செயற்இழந்துள்ளது

இதன் காரணமாக காசாவின் மருத்துவமனைகள் மின்பிறப்பாக்கிகளின் உதவியுடன் செயற்படுகின்றன.

காசாவிற்கான மின்சாரத்தை இஸ்ரேலே வழங்கிவந்தது எனினும் ஹமாசின் தாக்குதலை தொடர்ந்து மி;ன்சாரவிநியோகத்தை இஸ்ரேல் இடைநிறுத்தியுள்ளது.

வன்முறை அதிகரிப்பால் ஏற்படும் மனித துயரங்கள் வெறுக்கத்தக்கவையாக உள்ளன என தெரிவித்துள்ள மத்தியகிழக்கிற்கான சர்வதேச செஞ்சிலுவை குழுவின் பிராந்திய இயக்குநர் பப்ரிசியோ கார்போனி பொதுமக்களின் துயரங்களை குறைக்குமாறு நான் சம்மந்தப்பட்ட தரப்பினை கேட்டுக்கொள்கி;ன்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

காசா மின்சாரத்தை இழப்பதால் மருத்துவமனைகள் மின்சாரத்தை இழக்கின்றன புதிதாக பிறந்த குழந்தைகளும் முதியவர்களும் ஆபத்துக்குள்ளாகியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments: