News Just In

10/06/2023 03:02:00 PM

யாழில் சமிந்த வாஸ் கிரிக்கெட் பயிற்சி இன்று ஆரம்பம்!

யாழில் சமிந்த வாஸ் கிரிக்கெட் பயிற்சி இன்று ஆரம்பம்




JAFFNA STALLIONS CRICKET ACADEMY ஏற்பாட்டில் JAFFNA STALLIONS தலைமை பயிற்றுவிப்பாளர், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தலைமையில் கிரிக்கெட் பயிற்சி இன்று (06) காலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.

அதில், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட கிரிக்கெட் வீர, வீரங்கனைகள் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

குறித்த பயிற்சி முகாம் நாளை (07) , யாழ். இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், நாளைய மறுதினம் (08) வவுனியாவில் இடம்பெறவுள்ளது.

வடக்கில் மூன்று தினங்களும் இடம்பெறவுள்ள இந்த பயிற்சி முகாமில் இருந்து 150 வீர, வீராங்கனைகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களை மேலும் வலுப்படுத்தும் பயிற்சிகளை JAFFNA STALLIONS CRICKET ACADEMY முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: