News Just In

10/06/2023 02:59:00 PM

மட்டக்களப்பில் தங்கச்சங்கிலிகளை பறிக்கும் கும்பலைச் சேர்ந்த இருவர் நேற்று கைது!





மட்டக்களப்பு மற்றும் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுகளில் தொடர்ச்சியாக வீதிகளில் நடமாடும் பெண்களிடம் தங்கச்சங்கிலிகளை பறிக்கும் கும்பலைச் சேர்ந்த இருவரை பொலிஸார் நேற்று (05) கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொர்புடைய 28 மற்றும் 24 வயதுடைய அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்தவர்களையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து தங்க நகைகள், மோட்டார் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் தலைக் கவசங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜே.பி.ஜோய் தெரிவித்தார்

களுவாஞ்சிகுடி நிலைய பொறுப்பதிகாரி அபேவிக்கிரமவின் வழிகாட்டலில் தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அந்தோனியார் வீதியால் வந்து கொண்டிருந்த பெண்ணொருவரின் கழுத்தில் அணிந்திருந்த மூன்றே கால் பவுண் தங்கச் சங்கிலி, கல்லாறு பிரதேசத்தில் தனியார் வகுப்புக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த மாணவியின் கழுத்தில் இருந்த முக்கால் பவுண் தங்கச் சங்கிலி மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் வீதியால் வந்து கொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த முக்கால் பவுண் தங்கச் சங்கிலியையும் பறித்துவிட்டு தப்பி ஓடிய இரண்டு நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்லாறு பிரதேசத்தில் தனியார் வகுப்புக்கு சென்று கொண்டிருந்த மாணவியின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துவிட்டு சென்ற நபர்களின் மோட்டார் சைக்கிள் இலக்கங்களை குறித்த மாணவி பொலிஸாரிடம் வழங்கியதை அடுத்து களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் கோயில் ஒன்றின் முன்னால் குறித்த நபர்கள் நின்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் இலக்கங்களை வைத்து பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் களுவாஞ்சிகுடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது எதிர்வரும் 16ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கருவாஞ்சிக்கொடி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

No comments: