News Just In

10/05/2023 10:55:00 AM

கிண்ணியா குரங்கு பாஞ்சான் மக்கள் காணிக்குள் பௌத்த துறவிகள் இரு நாட்களாக படையெடுப்பு,மக்கள் சந்தேகம்!


கிண்ணியா குரங்கு பாஞ்சான் மக்கள் காணிக்குள் பௌத்த துறவிகள் இரு நாட்களாக படையெடுப்பு,மக்கள் சந்தேகம்!



A.H.HASFAR HASFAR

கிண்ணியா குரங்கு பாஞ்சான் என்கின்ற பிரதேசத்தில் இராணுவ முகாம் இருந்த முஸ்லீம்களுக்கு சொந்தமான காணிக்குள் நேற்றும் இன்றும்(04) பௌத்த மதகுரு ஒருவரின் தலைமையில் ஐவர் கொண்ட குழு தொடர்ச்சியாக வந்து சென்றனர்.

இவர்கள் மீது சந்தேகம் கொண்ட விவசாயிகளும் சமூக நிறுவனங்களும் குடியிருப்பாளர்களும் கிண்ணியா நகர சபை முன்னால் உறுப்பினர் எம்.எம்.மஹ்தியின் கவனத்திற்கு இதனை கொண்டு வந்தனர்.
இது தொடர்பில் குறித்த இடத்துக்கு சென்று இவ்வாறு தெரிவித்தார்.

இக்குழுவினர் புதையல் அகழ்வதற்காகவா அல்லது ஏதேனும் அடையாளங்களை புதைப்பதற்காகவா ?அல்லது ஏதேனும் மதம் சார்ந்த வணக்க தளங்களை அமைப்பதற்காகவா ?வந்து செல்கின்றார்கள் என்ற சந்தேகம் பரவலாக மக்களை பீதிக்குள்ளாக்கியது.

உடனடியாக களத்திற்கு சென்ற நான் போலீசாருக்கும் அறிவித்ததோடு 119 எனும் அவசர போலீஸ் முறைப்பாடு சேவைக்கும் அறிவித்ததோடு பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர், சூரங்கல் இராணுவ முகாம் போன்றவற்றிற்கும் தகவல்களை வழங்கி அவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பதை எனக்கு அறிய தாருங்கள் என கேட்டுக் கொண்டேன்.

நாடெங்கிலும் சிறுபான்மை சமூகம் வாழுகின்ற இடங்களில் நடைபெறுகின்ற செயற்பாடுகள் போன்று அல்லது கடந்த கால அனுபவங்கள் போன்று இக்கிண்ணியாவிலும் ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகி விடக்கூடாது என்பதற்காக இந் நடவடிக்கை என்னால் எடுக்கப்பட்டது என மேலும் தெரிவித்தார்.

--

No comments: