News Just In

10/26/2023 08:00:00 AM

இஸ்ரேல் இராணுவத்திற்கு எதிராக கிண்டலாக பதிவு மேற்கொண்ட பிரபல நடிகை கைது!

இஸ்ரேல் இராணுவத்திற்கு எதிராக கிண்டலாக பதிவு மேற்கொண்ட பிரபல இஸ்ரேலிய நடிகை மைசா அப்துல் ஹாதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலை அடுத்து இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் காசா பகுதியில் சுமார் 5000 பேர் கொல்லப்பட்டதாகவும் இதில் சுமார் 2000 பேர் குழந்தைகள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த போர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இஸ்ரேல் நடிகையான மைசா அப்துல் ஹாதி என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.இதனை அடுத்து அவரை காவல்துறை கைது செய்தது.

No comments: