News Just In

10/09/2023 07:58:00 AM

அத்தியாவசியமான துறைகளைத் தவிர வேறு எந்தவொரு அரச துறையிலும் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது : அமைச்சர் ரமேஷ் பத்திரன!

அரச சேவையில் எதிர்காலத்தில் மிகவும் அத்தியாவசியமான துறைகளைத் தவிர வேறு எந்தவொரு அரச துறையிலும் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொதுப்பணித்துறை அரசுக்கு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "15 இலட்சம் அரச ஊழியர்கள் உள்ளனர். நாட்டின் மக்கள் தொகை 21 மில்லியன் ஆகும்.

மக்கள் தொகையில் சுமார் 12 பேருக்கு ஒரு அரச ஊழியர் உள்ளார். இது உலகின் மிக உயர்ந்த அரச ஊழியர்களின் விகிதங்களில் ஒன்றாகும்.

இது பெரும் சுமையாக உள்ளதால் தொடர்ந்து அதனை மேற்கொள்ள முடியாது" என்றார்.

No comments: