News Just In

10/24/2023 10:42:00 AM

21 ஆலயங்களில் தங்க நகைகள்- பணம் திருடிய நபருக்கு விளக்கமறியல்!





நுவரெலியா , பதுளை பிரதேசங்களில் உள்ள 21 ஆலயங்கள் உட்பட பல இடங்களில் இடம்பெற்ற திருட்டு சம்பவங்கள் தொடர்பில் பிரதான சந்தேக நபர் ஒருவரை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது அத்துடன் திருடிய நகைகளை விற்பனை செய்ய உதவிய வியாபாரிகள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் நுவரெலியா அம்பேவளை பொரகஸ் பகுதியை சேர்ந்த 43 வயதுடையமூன்று பிள்ளைகளின் தந்தையானா முத்துசாமி ரகுநாதன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனடிப்படையில், பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாணைகளை முன்னெடுத்த நிலையில் தலவாக்கலை பிரதான நகரில் தங்க நகைகள் பதப்படுத்து வியாபாரிக்கு குறித்த பொருட்களை விற்பனை செய்திருந்தமை தெரியவந்தது ,

கடந்த ஒரு வருடங்களில் இடம்பெற்ற குறித்த திருட்டு சம்பவங்கள் தொடர்பில் நுவரெலியா பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து நுவரெலியா தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சியின் பணிப்புரைக்கமைய சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்து துரிதமாக செயற்பட்ட பொலிஸார் கண்காணிப்பு கமராவின் உதவியுடன் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

விசாரணையின் போது பிரதான சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் குறிப்பாக ஆலயங்களை உடைத்து திருடுவதற்கு முன் கடவுளை வணங்கி, தான் கடவுளிடம் மன்னிப்பு கேட்பேன் . தலவாக்கலை, ராகலை, ஹைபோரஸ்ட், லிந்துல, ஹட்டன், பொகவந்தலாவ, நானுஓயா, உடபுஸ்ஸல்லாவ, வெலிமடை, கெப்பெட்டிபொல, மாத்தளை, கம்பளை, நாவலப்பிட்டி ஆகிய பொலிஸ் எல்லைக்குட்பட்ட இருபத்தொரு பொலிஸ் எல்லைக்குட்பட்ட இந்து ஆலயங்களை உடைத்து அதிகமாக திருடி உள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரைரும் , குறித்த நபருக்கு நகைகளை விற்பனை செய்ய உதவிய வியாபாரிகள் இருவரையும் 23 திங்கட்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை பிரதான சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஏனைய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்

No comments: