
இந்தியாவின் ஆரவ் அனில் என்ற 17 வயது மாணவர் ஒருவர் ஸ்மார்ட் ஸ்பூன் ஒன்றைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
தனது மாமனார் கடந்த ஆண்டு மூளை நோயால் பாதிக்கப்பட்டபோது கரண்டியால் உண்பதற்கு சிரமப்பட்டுள்ளார். இதுவே புதிய ஸ்பூனை கண்டுபிடிக்கத் தூண்டியது என ஆரவ் தெரிவித்துள்ளார்.

பெங்களுரைச் சேர்ந்த இந்த மாணவனின் சாதனை தொழில்நுட்பத்துறையில் புதிய புரட்சியாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கரண்டியில் உள்ள சென்சார்கள் நடுக்கத்தைக் கண்டறிந்துகொள்ளும் தன்மையுடையன.
அதன்காரணமாக கரண்டி குலுக்களைத் தவிர்த்து திறம்பட இயங்குகிறது.
ஆரவ், தொழில்நுட்பத்துறையில் உள்ள ஆர்வம் காரணமாக இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி 10க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார்.
ஜேர்மனியில் கடந்த ஆண்டு நடைபெற்ற ரோபோ ஒலிம்பியாட் போட்டியில் ஸ்மார்ட் ஸ்பூனுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இரு அமெரிக்க நிறுவனங்கள் இதுபோன்ற ஸ்மார்ட் ஸ்பூன்களை விற்பனை செய்கின்றன. எனினும் அவற்றின் விலை 200 அமெரிக்க டொலர்களாகும்.
இந்திய மாணவன் தயாரித்துள்ள ஸ்பூன் 80 டொலர்களுக்கு விற்பனைசெய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments: