News Just In

9/09/2023 08:28:00 PM

மட்டக்களப்பு - தாழங்குடாவில் மோட்டார் வண்டியொன்றும் கன்டர் வாகனம் ஒன்றும் மோதி விபத்து!

மட்டக்களப்பு - தாழங்குடா தேவாலயத்திற்கு முன்னாலுள்ள மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகாமையில் மோட்டார் வண்டியொன்றும் கன்டர் வாகனம் ஒன்றும் சற்றுமுன்னர் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இவ்விபத்தில் மோட்டார் வண்டியானது முற்றுமுழுதாக சேதமடைந்ததோடு மோட்டார் வண்டியில் பயணித்த இரு இளைஞர்களும் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். 

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போலீசார் மேற்கொண்டுவருகின்றனர். 


No comments: