News Just In

9/12/2023 11:09:00 AM

மீண்டும் அரசியல் களம்! தயாராகும் கோட்டாபய




முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வரத் தயாராகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவி விலகியதில் இருந்து மௌனத்தை கடைப்பிடித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது தோல்வியடைந்த தனது பிம்பத்தை மீண்டும் கைப்பற்றி வலுப்படுத்த கோட்டாபய முனைந்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

நேற்றைய தினம் அரசியலில் பிரவேசிப்பதாக அறிவித்த அவரது நெருங்கிய உதவியாளரும் ஊடக உரிமையாளருமான ஒருவரால் தற்போது புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.

மக்களால் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட போதிலும் முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அனைத்து சலுகைகளையும் வசதிகளையும் பெற்ற கோட்டாபய ராஜபக்ச, அண்மையில் தனது நெருங்கிய உதவியாளரான திலித் ஜயவீரவினால் தலைமைத்துவம் ஏற்கப்பட்ட மௌபிம ஜனதா கட்சிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

திலித் ஜயவீர கட்சியை பொறுப்பேற்றதன் பின்னர் மௌபிம ஜனதா கட்சி தனது அரசியலமைப்பை மாற்றியமைத்து புதிய நிர்வாகிகளை தெரிவு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கட்சி இப்போது புதிய உறுப்பினர்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளது.கோட்டாபய ராஜபக்சவின் வியத்மக அமைப்பு போன்ற கட்டமைப்பை உருவாக்கி தொழில் வல்லுநர்கள் மற்றும் வர்த்தகர்களை தொடர்பு கொள்ள ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


No comments: