News Just In

9/23/2023 11:49:00 AM

கொழும்பு - கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் 13 பேர் மருத்துவமனையில்!

கொழும்பு - கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் 13 பேர் காயமடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு - கண்டி வீதியின் பெலும்மஹர சந்தியில் பஸ் வண்டியும் கொல்கலன் வண்டியும் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் வண்டியே விபத்தில் சிக்கியுள்ளதுடன் விபத்து தொடர்பில் யக்கல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: