மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களம் மாவட்ட செயலக தொழில் நிலையம் ஆகியவை அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தின் அனுசரணையோடு நடத்தும் மாவட்டத்தின் மாபெரும் தொழில் கல்விச் சந்தை எதிர்வரும் சனிக்கிழமை 12.08.2023 மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியில் இடமபெறவுள்ளதாக அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தின் அலுவலர் அனுலா அன்ரன் தெரிவித்தார்.
இந்ததொழில் சந்தையில்; மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொழில் தேடுநர்கள், தொழில் கல்வியைத் தொடர விரும்புவோர் சுயதொழிலுக்கு முயற்சிப்போர் ஆகியோருக்கு இது ஓர் அரிய வாய்ப்பு என்று மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.
ஆயிரத்திற்கு மேற்பட்ட உள்நாட்டு வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களுடன் 30 இற்கும் மேற்பட்ட தனியார் தொழில் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் பங்கு பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் காலை 930 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணிவரை தொழிற் சந்தை இடம்பெறும்.
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
No comments: