News Just In

8/24/2023 04:49:00 PM

தமிழ் அரசுக் கட்சியின் வட்டாரக் கிளையின் தலைவர் மீது தாக்குதல்!மட்டக்களப்பில் சம்பவம்





இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கருவேப்பங்கேணி வட்டாரக்கிளையின் தலைவர் தனுச பிரதீப் என்பவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்று (23.08.2023) இரவு சுமார் 9.20 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தனது வீட்டிலிருந்து உணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதற்குக் கடைக்குச் சென்று கொண்டிருந்தவேளை, கூழாவடி சந்தியில் உள்ள டிஸ்கோ விளையாட்டு மைதானம் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் தலையில் பலமாகத் தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவருக்குத் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக இன்று (24.08.2023) காலை சத்திர சிகிச்சை கூடத்திற்கு மாற்றப்பட்டு அறுவைச்சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர், நடைபெற இருந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்காக கருவேப்பங்கேணி வட்டாரத்தில் போட்டியிட இருந்த தமிழ் அரசு கட்சியின் வேட்பாளராவார்.

இந்த சம்பவம் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகள் வைத்தியசாலையில் உள்ள பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: