News Just In

8/07/2023 12:05:00 PM

தாயாருடன் குளித்துக் கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!மட்டக்களப்பில் சம்பவம்




மட்டக்களப்பில் 6 வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்தில் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச் சிறுவன் தாயாருடன் குளித்துக் கொண்டிருந்த போதே கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருணாசலம் சிவரூபன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments: