News Just In

8/04/2023 07:59:00 AM

முச்சக்கரவண்டியில் ஒற்றைச் சக்கரத்தில் சாகசம் காட்டிய இரு இளைஞர்கள் கைது!

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் ஹட்டன் மல்லியப்பு பகுதியில் முச்சக்கரவண்டிகளை ஒற்றைச்சக்கரத்தில் செலுத்தி சாகசம் காட்டிய இரு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த பகுதியில் இளைஞர்கள் குழுவொன்று ஆபத்தான முறையில் முச்சக்கர வண்டிகளை செலுத்தி அதனை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்த காணொளியின் அடிப்படையில் இரு முச்சக்கரவண்டிகளின் பதிவு எண்கள் மூலம் விசாரணை நடத்தி சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் 20-30 வயதுடைய ஹட்டன் பகுதியில் வசிப்பவர்கள் எனவும், நீண்ட விசாரணைகளின் பின்னர் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டிகளை ஆபத்தான முறையில் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர்களுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments: