தெகிவளை மிருகக்காட்சி சாலையின் தலைமை பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரம் முறிந்து விழுந்ததிலேயே பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிருகக்காட்சிசாலையின் பிரதான வீதிக்கு அருகில் உள்ள கால்நடை வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பாரிய மரம் வேரோடு சாய்ந்து மின்கம்பிகள் இணைக்கப்பட்டிருந்த கம்பத்தில் மோதியுள்ளது.
இதன்போது மதிய உணவை எடுத்து வந்த பிரதான பாதுகாப்பு அதிகாரி மீது மின்கம்பம் தலையில் மோதியுள்ளது.
இதனால் அவர் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
No comments: