News Just In

8/18/2023 12:08:00 PM

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் தமிழர்களின் வழிபாடு ஆரம்பம்!




குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் தமிழர்கள் தரப்பால் பொங்கல் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து வழிபாடுகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதேவேளை பௌத்த விகாரையில் பௌத்த மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் இணைந்து வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு- குவிவு குமுளமுனை வீதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள்  தெரிவிவிக்கின்றது .

இதேவேளை குருந்தூர் மலை நோக்கி செல்லும் தமிழ் மக்கள் பொலிஸாரினால் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

மேலும் குருந்தூர் மலைக்கு இரவோடு இரவாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்கள் பேருந்துகள், உழவு இயந்திரங்கள் சகிதம் சென்றுள்ளனர்.

இந்நிலையில் குருந்தூர் மலையில் அதிகளவான பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொங்கல் நிகழ்வு

மிகவும் ஒரு அபாயகரமான சூழலிலே பொங்கல் நிகழ்வு எவ்வாறு இடம்பெறவுள்ளது என்ற நிலையில் தற்போது பௌத்த விகாரையிலே வழிபாடுகளில் பௌத்த மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

புராதன சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அப்பிரதேச மக்கள் தங்களது மத ரீதியான பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளலாம் எனவும் ஒருவரது மத வழிபாடுகளுக்கு மற்றைய தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என்பதற்காக ஒருவரது மதவழிபாடுகளை தடுக்க தடை கட்டளை வழங்க முடியாது என பொலிஸாரின் தடையுத்தரவு கோரிக்கையை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: