News Just In

8/26/2023 03:35:00 PM

செங்கலடி பிரதேசத்தில் கமத்தொழில் அமைச்சின் சந்தைப்படுத்தல் ஊக்குவிப்பு நிகழ்வு!



கமத்தொழில் அமைச்சினால் கிழக்கு மாகாணத்தின் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் ''சந்தைப்படுத்தல் ஊக்குவிப்பு'' எனும் தொனிப் பொருளினாலான நிகழ்வு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் (24) இடம்பெற்றது


பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் தலைமையில்
நடைபெற்ற நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் நிருபா பிருந்தன் வழிகாட்டலில் பயனாளிகளுக்கான நலனுதவிகளை, வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கையளித்தார்.

இதன்போது பிரதேச செயலக காணிப் பிரிவினூடாக 100 காணி அனுமதிப் பத்திரங்கள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

அத்துடன் ஐக்கிய நடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் மற்றும் பிரண்டினா நிறுவனத்தின் ஆதரவுடன் திட்டமிடல் பிரிவினூடாக தெரிவு செய்யப்பட்ட பிரதேச மக்களுக்கு மலசலகூட நில அளவை வரைபடங்கள் விநியோகிக்கப்பட்டன.

ஸ்மார்ட் காலநிலை (Climate Smart) திட்டத்தினூடாக சுமார் 65,000 பெறுமதியான 31 வீட்டுத் தோட்ட விவசாயிகளுக்கான வர்த்தக உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் ஸ்மார்ட் காலநிலை திட்டத்தின் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர் ஜி. அக்‌ஷயன் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

No comments: