News Just In

8/05/2023 08:51:00 AM

நாடாளுமன்றத்தில் ஜாம் போத்தல் மற்றும் ரின் பால் குவளை திருடியா நபர் கைது!

நாடாளுமன்றத்திற்கு வெளியே ஜாம் போத்தல் மற்றும் ரின் பால் குவளை ஒன்றை சமையல்காரர் ஒருவர் திருடி எடுத்துச் செல்ல முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நேற்று பிற்பகல் நாடாளுமன்ற பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரான சமையல்காரர் தனது பணியை முடித்து நாடாளுமன்ற பிரதான நுழைவாயிலில் சென்றபோது அவர் வைத்திருந்த பையை பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக வெலிக்கடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக நாடாளுமன்ற சமையலறையில் இருந்து உணவுப் பொருட்களை எடுத்துச் சென்ற பல ஊழியர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: