புதிய திட்டம் தயாரிக்கப்படும் வரை முதியோர், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவுகளை அரசாங்கம் தொடர்ந்தும் வழங்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் உட்பட 647,683 பேர் தொடர்ந்தும் கொடுப்பனவைப் பெறுவார்கள் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
அவர்களில் 41,119 சிறுநீரக நோயாளிகள், 88,602 ஊனமுற்றோர் மற்றும் 517,962 பேர் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர்.
எதிர்வரும் நாட்களில் கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதன்படி, முதியோர் கொடுப்பனவுகள் தபால் நிலையங்களில் இருந்தும், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவுகள் பிரதேச செயலகங்கள் ஊடாகவும் வழங்கப்படும்.
No comments: