வவுனியா தோணிக்கல் சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவரான சுகந்தனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய்யுள்ளது.
வவுனியா – தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நுழைந்த வாள்வெட்டு குழுவினர் இந்த அராஜகத்தை அரங்கேற்றி இருந்தனர்.
இதன்போது வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலர், வீட்டை எரித்ததோடு, அங்கிருந்தவர்கள் மீதும் வாள்வெட்டு தாக்குதல் நடத்தி இருந்தனர்.
சம்பவத்தில் 21 வயதான இளம் குடும்பப்பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததுடன், அவரது கணவரான சுகந்தன் எரிகாயங்களுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கணவரும் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதேவேளை தமிழர் பகுதிகளின் அதிகரித்துவரும் வன்முறைகளால் பல உயிர்கள் அநியாயமாக பறிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு இனியேனும் இபடியான சம்பவங்கள் இடம்பெறாது தடுக்க வேணடும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments: