News Just In

6/01/2023 09:11:00 PM

வங்கிகளுக்கு அனுப்பி வணிகப் பாடம் தொடர்பான அறிவை செயன்முறைப் பங்குபற்றலுடன் கண்காணிக்க வேண்டும் - கல்வி அமைச்சர்!



நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடியாகத் தாக்கம் செலுத்தும் வணிக மற்றும் வியாபாரக் கல்வி போன்ற பாடங்களைக் கற்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் அவை தொடர்பான கோட்பாட்டு அறிவை, நடைமுறையில் தொழில் ரீதியாகப் பயன்படுத்தும் வங்கிகள் போன்ற நிறுவனங்களுக்கு அனுப்பி, நடைமுறை ரீதியான மற்றும் விடய அறிவின் செயன்முறைப் பயன்பாடு தொடர்பான அனுபவத்தை அம்மாணவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என தான் யோசனை முன்வைப்பதாகவும், அதற்கு அவசியமான எழுத்து மூல அனுமதியை சுற்றுநிருபம் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்தார்.

கல்வி அமைச்சு மற்றும் இலங்கை சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவனம் (சி எம் ஏ) இணைந்து ஏற்பாடு செய்த சிறந்த பாடசாலை வர்த்தக சங்கத்தைத் தெரிவு செய்வதற்கான் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்காக பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற, பரிசு வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தனது உரையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவ்வாறே மிகவும் அனுபவம் வாய்ந்த வருடமான 2022ஆம் ஆண்டு, கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகள் 2023ஆம் ஆண்டில் இடம்பெறுவதுடன், தற்போது நாடு முழுவதும் 3500 பரீட்சை நிலையங்களில் சாதாரண தரப் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருக்கையில், உயர்தரப் பரீட்சை விடைத் தாள்களை திருத்தும் பணிகள் ஒரே நேரத்தில் நிகழும் அனுபவத்திற்கு பரீட்சைத் திணைக்களத்துடன் கல்வி அமைச்சும் இணைந்து, வெற்றிகரமாக முகங்கொடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் விபரித்தார்.

நான்கு பாடவிதானங்களின் கீழ் இடம்பெற்ற உயர் தரப் பரீட்சையில் மற்றும் தற்போது நடைபெறும் சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை ஜுன் மாதம் இறுதியில் வெளியிடுவதற்கு உத்தேசிப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

2030ஆம் வருடத்தில் மேற்கொள்ள வேண்டிய நிலைபேறான அபிவிருத்தி இலக்கை நோக்காகக் கொண்டு அறிவை மேம்படுத்துவதற்கு எப்போதும் ஆர்வத்துடன் செயற்பட வேண்டும்.

அவ்வாறின்மை காரணமாக காலாவதியான கல்வி முறையில் விரைவான மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும், பாடவிதான திருத்தத்தின் ஊடாக மாணவர்களின் மூலையின் இடது மற்றும் வலது இரு பக்கங்களும் வளர்ச்சியடையும் வகையில் பாடங்களைக் கற்பதற்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி, மருத்துவ விஞ்ஞானத்தைக் கற்கும் மாணவர்களுக்கு சங்கீதம் போன்ற கலைப் பாடங்களையும் கற்றுக்கொள்வதற்கு வாய்ப்புக்கள் காணப்பட வேண்டும்.

அவ்வாறு இல்லாவிடின், மிகவும் விரைவாக பாடசாலைக் கட்டமைப்பில் மீதமான முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வியில் மாத்திரம் காணப்படும் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அதற்கிணங்க கல்வியின் பரிவர்த்தனை மாற்றங்களில் மாத்திரம் தலையிட்டு, இற்றை வரைக்கும் தரம் ஒன்று முதல் மாணவர்களுக்கு ஆங்கில மொழிப் பிரயோகத்தை ஏற்படுத்துவதற்காக ஸ்டீம் கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெளிவுபடுத்தினார்.

அதற்கிணங்க முன்னோடித் திட்டமாக நாடளாவிய ரீதியில் 20 பாடசாலைகளில் தரம் 6முதல் 9வரையும் மற்றும் தரம் 10முதல் தரம் 13 வரையும் மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய பாடங்களை கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், உரிமைக்காகப் போராடும் அதேவேளை அவர்களது பொறுப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வுடன் மாணவர்களின் கல்வி உரிமைக்காக சமூகம் முன்னிற்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.


No comments: