News Just In

5/18/2023 07:55:00 AM

உலகளாவிய இராமகிருஷ்ணமடம் மற்றும் மிஷனின் துணைத் தலைவர் இன்று மட்டக்களப்பு விஜயம்!

உலகளாவிய இராமகிருஷ்ணமடம் மற்றும் மிஷனின் துணைத் தலைவரும், சென்னை ஸ்ரீ இராமகிருஷ்ணமடத்தின் தலைவருமான அதிவணக்கத்துக்குரிய ஸ்ரீமத் சுவாமி கெளதமானந்தஜி மஹராஜ் அவர்கள் இன்று மட்டக்களப்புக்கு வருகை தரவுள்ளார்.

மட்டக்களப்புக்கு வருகைதரும் சுவாமிஜி அவர்களை இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கல்லடி மணிக்கூட்டு கோபுரச் சந்தியிலிருந்து இராமகிருஷ்ணமிஷன் ஆஸ்ரமம் வரை அழைத்து வரப்படுவார். மறுநாள் மாலை 5.30 மணிக்கு கல்லடி இராமகிருஷ்ணமிஷன் திருக்கோவிலில் சிறப்பு சொற்பொழிவு இடம்பெறும். இதனைத் தொடந்து 20.05.2023 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு காலடியில் உள்ள விபுலானந்த ஞாபகார்த்த மணி மண்டபத்தில் சிறப்பு பொது நிகழ்வு இடம்பெறும்.

சிறப்பு பொது நிகழ்வில் பஜனை வாத்திய கச்சேரி என்பவற்றுடன் வரவேற்பு நடனமும் இடம்பெறும். இதனைத் தொடர்ந்து ஸ்ரீமத் சுவாமி நீலமானந்தஜி மஹராஜ் அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து இலங்கை இராமகிருஷ்ணமிஷன் தலைவர் அவர்களின் தலைமையுரை, ஸ்ரீமத் சுவாமி சர்வரூபானந்தஜி மஹராஜ் அவர்களின் வாழ்த்துரையை தொடர்ந்து புத்தக வெளியீடும் இசை இறுவெட்டு வெளியீடும் இடம்பெறும்.

புத்தக வெளியீட்டினை தொடர்ந்து ஸ்ரீமத் சுவாமி கெளதமானந்தஜி மஹராஜ் அவர்களால் ஆசியுரையும் வழங்கப்படவுள்ளது.



No comments: