
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான MiG-21 போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்றைய தினம் ( 08.05.2023) இந்திய ராஜஸ்தான் மாநிலத்தின் ஹனுமன்கர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இன்றைய தினம் (08.05.2023) காலை வழக்கமான பயிற்சிக்காக சூரத்கர் பகுதியில் இருந்து புறப்பட்ட விமானம், ஹனுமன்கர் மாவட்டத்துக்குள் நுழைந்த போது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
விமானியின் கட்டுப்பாட்டில் இருந்து விலகிய போர் விமானம், பலோல்நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியுள்ளது.
இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட பொதுமக்கள் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
விமானம் விழுவதற்கு ஆரம்பித்தபோதே அதிலிருந்து விமானி பெராசூட் உதவியுடன் வெளியேறிவிட்டதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக அப்பகுதியில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடிவிட்டதையடுத்து, அங்கு பொஸிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு இந்திய விமானப் படை உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: