News Just In

5/16/2023 12:25:00 PM

இலத்திரனியல் வாகன இறக்குமதி குறித்து அமைச்சரவையின் தீர்மானம்!





வெளிநாடுகளில் பணிகளில் ஈடுபட்டு வரும் இலங்கையர்கள், இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்ய தொடர்ந்தும் அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் பணிகளில் ஈடுபட்டு வரும் இலங்கை பிரஜைகள் இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான பூரண அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறையை நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட உள்ளது.

இதன்மூலம் வெளிநாடுகளில் தொழில்களில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களுக்கு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் பணியாற்றி வரும் இலங்கையர்கள் சரியான முறையில் பணம் அனுப்பி வைத்தால் அவர்களுக்கு இவ்வாறு வாகன இறக்குமதிக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

பணம் அனுப்பி வைக்கப்படும் தொகைக்கு ஏற்ற வகையில் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: