
யாழ். வலிகாமம் வடக்கு பகுதியில் தையிட்டி விகாரைக்கு கலசம் வைக்கும் நிகழ்வு ஏப்ரல் 27ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் அதனுடைய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
குறித்த நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் இலங்கை இராணுவத்தின் இணையத்தளத்தில் சிலநாட்களுக்கு முன் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி சுவர்ண போதொட்ட கலந்து கொண்டு விகாரைக்கான கலசத்தை வைத்துள்ளார்.
இராணுவ இணையத்தளத்தின் பதிவில், காங்கேசன்துறையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸ விகாரையில் புனரமைக்கப்பட்ட ஸ்தூபி வைக்கும் பணி 27 ஏப்ரல் 2023 அன்று இடம்பெற்றது.
யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி சுவர்ண போதொட்ட சுப நிமிடத்தில், மகா சங்கத்தினரின் 'பிரித்' கோஷங்களுக்கு மத்தியில் கலசத்தை வைத்தார்.
யாழ். மாவட்ட கட்டளைத்தளபதியின் முயற்சிக்கு அமைய திஸ்ஸ விகாரையின் பிரதமகுருவான கிந்தோட்டை நந்தராம தேரர் விகாரை உருவாக்கப்பட்டது.

யாழ். மாவட்ட கட்டளைத்தளபதியின் முயற்சிக்கு அமைய திஸ்ஸ விகாரையின் பிரதமகுருவான கிந்தோட்டை நந்தராம தேரர் விகாரை உருவாக்கப்பட்டது.

No comments: