News Just In

5/26/2023 12:03:00 PM

தமது நாமத்தின் நற்பெயரை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளப்படும்-சினோபெக் நிறுவனம்!




நாட்டில் எரிபொருள் விற்பனை செய்வதற்கு வெளி நிறுவனங்களை பயன்படுத்துவதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானது என சீனாவின் சினோபெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தமது எரிவாயு நிலையங்களுக்கான சேவை உரிமைகளை வேறு எந்த தரப்பினருக்கும் மாற்ற விரும்பவில்லை என்றும் சினோபெக் நிறுவனம் தெரிவித்துள்ளது

மேலும் தனது வர்த்தக நாமத்தின் நற்பெயரைப் பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

அண்மையில் இலங்கை அரசாங்கத்துடனும்,சினோபெக் நிறுவனத்துடனுமான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

No comments: