
- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நீதி சிறைச்சாலைகள் அரசியலமைப்பு அமைச்சினால் எதிர்வரும் சனிக்கிழமை 27.05.2023 மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் மாபெரும் நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் சேவையில் பாதுகாப்பு அமைச்சு, நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சு, பதிவாளர் நாயகம் திணைக்களம், ஆட்பதிவுத் திணைக்களம், குடியகல்வு குடி வரவுத் திணைக்களம், வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் தூதரகப் பிரிவு, காணி ஆணையாளர் திணைக்களம், மாகாண காணி ஆணையாளர் திணைக்களம் ஆகியவை பங்குபற்றுகின்றன.
அதனால் சேவைகளைப் பெற விரும்பும் பொதுமக்கள் அன்றைய தினம் காலை 8.30 மணிதொடக்கம் உரிய நடமாடும் சேவை இடத்திற்கு வந்து சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடம்பெயர் சேவையில், பிரஜாவுரிமை பெற்றுக் கொள்ளல், பிறப்பு இறப்பு விவாக பதிவுகள் தொடர்பான சேவைகள், தேசிய ஆளடையாள அட்டை தொடர்பான சேவைகள், காணி தொடர்பான சேவைகள், இழப்பீட்டுக் கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ளல், காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகள், சட்டம் தொடர்பான விடயங்கள், இணக்கப்பாடு தொடர்பான விடயங்கள் இடம்பெறவுள்ளதாகவும் ; அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments: